மரண அறிவித்தல்

நாகமுத்து இரத்தினம் (தம்பித்துரை மாஸ்ரர்)

தோற்றம்: 03.11.1932   -   மறைவு: 23.02.2020

அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி மற்றும் தும்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து இரத்தினம் (ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர்) நேற்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து – செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் காலஞ்சென்ற வீரசிங்கம் – அன்னபாக்கியம் தம்பதிகளின் மூத்த மருமகனும் லோக நாயகியின் (இளைப்பாறிய ஆசிரியை) பாசமிகு கணவரும் நளினா (ஆசிரியைஆவரங்கால் நடராச இராமலிங்க வித்தியாலயம்). நிர்மலன் (அலுவலக பணியாளர் மாவட்ட நீதிமன்றம் – பருத்தித்துறை), விமலன் (ஆசிரியர் – மன்/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும் குகதாசன் முகாமையாளர் – தேசிய சேமிப்பு வங்கி – முல்லைத்தீவு), பிரசாந்தி (மருந்து கலவையாளர் ஆரம்ப சுகாதாரப்பிரிவு – பருத்தித்துறை, சங்கீதா (ஆசிரியை – யா/ |வீரசிங்கம் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், டிலக்ஷன் (மாணவன் மொறட்டுவப் பல்கலைக்கழகம்), தனலக்ஷன், (மாணவன் – யா/ இந்துக் கல்லூரி), சியாமிகா (மாணவி, புற்றளை மகாவித்தியாலயம்), வினுஷாந் (மாணவன், புற்றளை மகாவித்தியாலயம்) கர்ஷா, அனுரந்தன் ஆகியோரின் அன்பு பேரனு மாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அச்சுவேலியில் உள்ள அவரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக இன்று (24.02.2020) திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் அச்சுவேலி தெற்கு முழக்கன் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

குடும்பத்தினர். பிரதான வீதி, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24.02.2020
இடம் : அச்சுவேலி தெற்கு முழக்கன் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 075 8462