மரண அறிவித்தல்

நாகலிங்கம் தவமணிநாயகம்

  -   மறைவு: 15.01.2017

 

நாகலிங்கம் தவமணி நாயகம் (ஒய்வு பெற்ற முகாரி மின்சாரப்பகுதி – சீமெந்துக் கூட்டுத்தாபனம் காங்கேசன்துறை, மேடைஒலி, ஒளி அமைப்பாளர், மின் இணைப்பு ஒப்பந்தக்காரர், நிர்வாகசபை உறுப்பினர் – தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானம், தலைவர் – மல்லாகம் கோணப்புலம் ஞான வைரவர் கோயில்)

யாழ், மல்லாகத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தவமணிநாயகம் (15.01.2017) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புதல்வனும், நாகலிங்கம் – செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும், திலகமணியின் அன்புக்கணவரும் கருணாகரன் (நோர்வே), தயானந்தன் (மின் இணைப்பாளர், முன்னாள் ஊழியர் – லங்கா சிமெந்து கூட்டுத்தாபனம்), ரவீந்திரன் (பிரான்ஸ்) காலஞ்சென்ற முரளிகிருஷ்ணன் மற்றும் யமுனா (யாழ், மாநகரசபை) ஆகியோரின் அன்புத்தந்தையும், சாராதவல்லி (நோர்வே), ரோகினி(அதிபர், யா/அளவெட்டி சதானந்தா வித்தியாலயம்), கேதீஸ்வரி (பிரான்ஸ்), சண்முகராசா (களஞ்சியப்பொறுப்பாளர் – இலங்கை போக்குவரத்துசபை காரைநகர்) ஆகியோரின் மாமனாரும் ரவிசாந், கோபிசாந், சம்புஜன், சங்கவி, சாம்பவி, யாதவி, மோகவி ஆகியோரின் அன்புப் பேரனும் கமலமணி, தயாளமணி, கனகமணி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற சோமசுந்தரத்தின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தயானந்தன்
தொலைபேசி : 0212241693