மரண அறிவித்தல்

அமரா் பஞ்சரட்ணம் ஜெயரட்ணம்

தோற்றம்: 21.11.1950   -   மறைவு: 10.09.2015

யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கை பிறப்பிடமாகவும், சங்குவேலி தெற்கு மானிப்பாயை வசிப்பிடாகவும் கொண்ட பஞ்சரட்ணம் ஜெயரட்ணம் 10.09.2015 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற பஞ்சரட்ணம் அன்னம்மா தம்பதியின் அன்பு மகனும், காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் அன்னமணி தம்பதியாின் அன்பு மருமகனும்,

வரலட்சுமியின் அன்புக் கணவரும், ருஷானி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சயந்தனின் அன்பு மாமனும்,

காலஞ் சென்றவர்களான குணரட்ணம், விஐயரட்ணம், சரஸ்வதி மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ஜெயரூபி, சகுந்தலாதேவி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், பாஸ்கரன் (UK) சந்தியாதேவி, நவசக்தி, சந்திரா (பிரான்ஸ்) இன்பராசா, நக்கீரன் (பிரான்ஸ்) பிறேமவதனி, குமரன்(UK) சாமினி ஆகியோரின் மைத்துனரும்,

குனேந்திரன், அனிதா, லடிசா (UK) ஆகியோரின் சித்தப்பாவும், நிசாந், நிவேதா, நிதுஷா, ஆகியோரின் பெரியப்பாவும், சாஜினி, சர்வினி, அபனேஷ், மதிஷா, பத்மதர்ஷினி, நாகராஜ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13.09.2015) ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 2.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல்,
குடும்பத்தினா்.

நிகழ்வுகள்
இறுதிக் கிரியை
திகதி : 13.09.2015, ஞாயிற்றுக்கிழமை, 11.30 மணி
இடம் : மானிப்பாயில் உள்ள அன்னாரது வீட்டில்...
தகனம்
திகதி : 13.09.2015, ஞாயிற்றுக்கிழமை, 2.00 மணி
இடம் : மானிப்பாய் பிப்பிலி இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு
நிரோஷன் - மகன்
தொலைபேசி : 0777 265 141