மரண அறிவித்தல்

மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் வடக்கு மாகாணசபை முல்லை மாவட்ட உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும்)

தோற்றம்: 11.05.1948   -   மறைவு: 01.10.2016

மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் வடக்கு மாகாணசபை முல்லை மாவட்ட உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும்)

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மரியாம்பிள்ளை அன்ரனி ஜெயநாதன் (ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரியும் வடக்கு மாகாணசபை முல்லை மாவட்ட உறுப்பினரும் வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும்) அவர்கள் (01.10.2016) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் முன்னைநாள் முல்லைத்தீவு பட்டின சபைத்தலைவர் திரு.மரியாம்பிளை – திருமதி.மேரி திரேசா தம்பதியரின் மூத்த புதல்வனும் காலஞ்சென்ற மேரி அமலோற்பவநாயகி அவர்களின் அன்புக் கணவரும் பீற்றர் இளஞ்செழியன், றெஜி இளஞ்செழியன், காலஞ்சென்ற கிறிஸ்டி இளஞ்சேந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் மேரி ஆன் பிரான்ஸிஸ்கா(லீலா), அலோஷியஸ் நேசராஜா (குலசிங்கம்), மேரி பிறிம்ரோஸ்(புசி), அன்ரனிப்பிள்ளை (அன்ரன்), மேரி கொன்செப்ரா(பேபி), ஆகியோரின் அன்புச் சகோதரனும் செபமாலை செபமணி(லங்கநாதன்), மேரிரோஸ் ஜசிந்தா (சின்னா), வின்சன் ஞானமணி, மேரிபுளோரன்ஸ், பூபாலசிங்கம், பெஞ்சமின் அருமைநாயகம், மேரிராணி, சேவியர் குலநாயகம், விக்டர் தனி நாயகம், மேரிநிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் (06.10.2016) வியாழக்கிழமை மு.ப 11.00 மணிக்கு பொது மக்களின் அஞ்சலிக்காக முத்தவெளியில் (முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்னால்) வைக்கப்பட்டு பி.ப 3.00 மணியளவில் முல்லைத்தீவு புனித இரசாயப்பர் ஆலயத்தில் திருப்பலி  ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் உன்னாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
உன்னாப்புலவு கத்தோலிக்க சேமக்காலை
திகதி : 06.10.2016
இடம் : முல்லைத்தீவு
தொடர்புகளுக்கு
பீற்றர் இளஞ்செழியன்
கைப்பேசி : 0772045444