மரண அறிவித்தல்
லூக்காஸ் பற்றிமா மனோகரன் (ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்)
பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லூக்காஸ் பற்றிமா மனோகரன் 13.09.2016 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்தி லூக்காஸ்- மேரி மாகிறட் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும் ஜெராட் சுவேந்திரன் (ஜேர்மனி), பிறிஜற் வனஜா (ஜேர்மனி), செல்வநாஜகி (விஜயா), ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரனும் ஜோன் விஜேந்திரன், ஜாசிந்தா, எட்வின் பீரிஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், Dr. றொஷானி பியூற ன் (ஜேர்மனி) றொசாந்தன், காலஞ்சென்ற அன்ரோ நிஷாந்தன் மற்றும் Dr. சுகிர்தனன் (ஜேர்மனி), Dr. தர்ஷனன் (அயர்லாந்து), மிதுர்சனன் (B.sc), கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு மாமனும்,சியாம், பிரவீன், ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவர்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (17.09.2016) சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு பண்டத்தரிப்பு புனித செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனித செபமாலை அன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.