மரண அறிவித்தல்

வேலும்மயிலும் கணேசமூர்த்தி

தோற்றம்: 26/10/1947   -   மறைவு: 25/01/2016

திக்கத்தை பிறப்பிடமாக கொண்டவரும் வேலும்மயிலும் மருந்துக் களஞ்சிய உரிமையாளரும் (பரந்தன்) முன்னாள் கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவரும் பிரபல தொழிலதிபருமாகிய வேலும்மயிலும் கணேசமூர்த்தி அவர்கள் நேற்று (25.01.2016) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற வேலும்மயிலும் – பத்மினி தம்பதியரின் அன்பு மகனும் இராசா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனுமாவார்.

நாகரத்தினத்தின் பாசமிகு கணவரும் North pole property Developers Pvt Ltd கொழும்பு நிறுவன உரிமையாளர் கங்காதரனின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்றவர்களான சி.நாகேஸ்வரி, த.கணேசம்மா ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.

காலஞ்சென்றவர்களான க.சின்னத்தம்பி, க.தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கலாஜினியின் அன்பு மாமனாரும், வட்சாங்கன் (பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன்), சுவஸ்திகா (சைவ மங்கையர் கழகம் வெள்ளவத்தை) ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (26.01.2016) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்காக குமரபுரம் வேலும்மயிலும் நவீன அரிசி ஆலையில் வைக்கப்பட்டு, நாளை (27.01.2016) புதன்கிழமை காலை 7.00 மணிக்கு அன்னாரின் இல்லமாகிய “ வேலும்மயிலும் வாசம் ” அல்வாய் மேற்கு, திக்கத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று முற்பகல் 10.00 மணிக்கு திக்கம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (27.01.2016)
இடம் : திக்கம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
கங்காதரன் - மகன்
தொலைபேசி : 0777 881 537