31 வது நாள் நினைவு அலைகள்

ஸ்ரீமான் கனகரட்னம் கனகசபை (இலங்கை இராணுவம் முன்னாள் சேவையாளர்,ஏற்றோபிக்கோ இலங்கைத் தமிழ் முதியோர் சங்க ஆரம்பகால உறுப்பினர், வீரகேசரி வார வெளியீடு அபிமான வாசகர் )

ஜென்மம்  நிறைந்தது சென்றவர் வாழ்வு , சிந்தை கலங்கிட வந்தவர் வாட
நேரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி எம்மிடம் சூழ்க

ஜனனமும் பூமியில் புதியது இல்லை , மரணத்தை போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துலாவிய கண்களும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உடல் வெந்தது சாம்பலும் இங்கே
கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக?மண்ணில் தெரிந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக? ஏற்றங்களால் அந்த இன் உயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலும் நாள் ஒன்று இல்லை,இறப்பு இல்லாமலும் நாள் ஒன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை,மறதியைப் போல் ஒரு மாமருந்து இல்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவது இல்லை, தரை தொடும் தாரகைகள் அழுவது இல்லை
நதி மழை போன்றதே விதி என்று கண்டோம். மதி கொண்ட மானிடர் மயங்குவது என்ன
மரணத்தினால் சில கோபங்கள் தீரும், மரணத்தினால் சில சாபங்கள் தீரும்

வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் .விதை ஒன்று வீழ்ந்திட செடி வந்து சேரும்
பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்,சூரியக் கீற்று ஒளி தோன்றிடும் போதும்
மழலையின் தென் மொழி செவியுறும் போதும். மாண்டவர் எம்மிடம் வாழ்ந்திடக் கூடும்
மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க, தூயவர் கண் ஒளி சூரியன் சேர்க
பூதங்கள் ஐந்திலும் பொன் உடல் சேர்க ,போனவர் புண்ணியம் எம்முடம் சேர்க

“எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் “
இறைநிலை பெற்ற பேரன்புத் தந்தையின் நினைவாக
சாந்தி நிலையம் (முதியோர் இல்லம்)கைதடி இலங்கையில் Tamilcnnlk.com மூலமாக
விசேட மதிய உணவு 05.31.2015 ஞாயிறு (வைகாசி விசாகம் -ஆறுமுகம் நட்சத்திரம்) வழங்கப்பட்டது.

தகவல்
குடும்பத்தினர்
ஏற்றோபிக்கோ கனடா

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
தொலைபேசி : +416 745 5359