மரண அறிவித்தல்
திருமதி ஐயம்பிள்ளை தங்கம்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை தங்கம் அவர்கள் 06-03-2014 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குணசிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நாகநாதி, காலஞ்சென்ற முருகேசு, சுந்தரம், சின்னம்மா, பார்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சத்தியசீலன், காலஞ்சென்ற சன்முகமாலினி, காலஞ்சென்ற சத்தியவான், குணதாசன், விஜலட்சுமி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, சத்தியலெட்சுமி, ஜீவலட்சுமி, நவலட்சுமி, கௌரி, சாந்தி, கவிதா, சக்திவேல், விக்கினேஸ்வரன், உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு சீர்க்கண்ணன் சீர்களம், முல்லை வீதி விசுவமடு என்னும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

