மரண அறிவித்தல்,
திரு சூசைமுத்து அந்தோனிப்பிள்ளை (திரவியம் மாஸ்ரர் – இளைப்பாறிய பாடசாலை அதிபர், தென்மோடி நாட்டுக்கூத்து அண்ணாவியார்)
போயிட்டி இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், சக்கோட்டையிலும், கனடாவிலும் வாழ்ந்தவருமான எஸ் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-06-2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து மரியம்மா தம்பதிகளின் ஏக புதல்வனும்,
இளைப்பாறிய மருத்துவத்தாதி றோசலின்(அன்னமுத்து) அவர்களின் பாசமிகு கணவரும்,
Dr. பிரான்சிஸ்கா(இந்திரா- இலங்கை), அன்ரன் ஜெயக்குமார்(றஞ்சன்- கனடா), யசிந்தா(சித்திரா- கனடா), அன்ரன் உதயகுமார்(றாஜூ- கனடா), F. பற்றிமா(மீறா- கனடா), அன்ரன் பாலகுமார்(றவி- கனடா), மறீனா(சுபத்திரா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலம்சென்றவர்களான செல்வரத்தினம் மாசிலாமணி, வில்வீனம்மா அறுக்காஞ்சிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜோர்ஜ்(நோர்வே), காலம்சென்றவர்களான மாசிலாமணி, அறுக்காஞ்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நாட்டுப்பற்றாளர் பிலோமினா ஜோர்ஜ் அவர்களின் சகலனும்,
அன்ரன்(அருளப்பு- இலங்கை), F. வுளோறிடா(கனடா), ஹெலன்(றதி- கனடா), சாந்தி(கனடா), யோண்சன்(கனடா) ஆகியோரின் மாமனாரும்,
அன்ரன்பீலிக்ஸ்(மணிவண்ணன்) அவர்களின் தாய்மாமனும்,
ராஜேஸ், தினேஸ், சோபியா, மிறியம், மேர்பி, சாம், யமுனா, ஜொனாத்தன், சார்ள்ஸ், அஞ்சலி, அரசன், அழகி, கிசோர், சங்கரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

