மரண அறிவித்தல்
திரு சண்முகராஜா சிவகுமாரன் (கணித ஆசிரியர்)

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகராஜா சிவகுமாரன் அவர்கள் 18-07-2014 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகராஜா, கனகாம்பிகை(ஜெர்மனி) தம்பதிகளின் அருமை புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா, ஜீவகாந்தி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிரேகா அவர்களின் அன்புக் கணவரும்,
கல்பனா(ஜெர்மனி), தினேஸ்(ஜெர்மனி), அனிந்திகை(ஜெர்மனி), ரமேஸ்(ஜெர்மனி), கனகதுர்க்கா(ஜெர்மனி), சிவனங்கை(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகௌரி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
துரைலிங்கம்(கனடா), நடராஜா(லண்டன்), காலஞ்சென்ற கருணலிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவேதா பார்த்திபன்(லண்டன்), மயூரவானன்(லண்டன்), நவீதா(லண்டன்), நிவேதா(லண்டன்), விதுரா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துதிபரதவயோகன், கலாநிதி(இலங்கை), தயாநிதி(லண்டன்), சத்தியாவதனி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலதேவி(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
அனிஷா(ஜெர்மனி), சேனந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Wielandstrasse 39,
10629 Berlin,
Germany.
தகவல்
குடும்பத்தினர்