மரண அறிவித்தல்
Dr.ஆறுமுகம் கோபாலசிங்கம் (B.Sc Eng.(hons)M.S.(USA),P.E.P.E(C.Eng)(USA),MNSPE

அம்பலவாணர் வீதி,உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் USA ஐ வதிவிடமாகவும் கொண்ட Dr.ஆறுமுகம் கோபாலசிங்கம் 11.08.2015 கொழும்பில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் (இளைப்பாறிய ஆசிரியர்)மற்றும் தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் கனிஷ்ட புத்திரனும்,குலேந்திரசிங்கம்(வைத்தியர்-சிங்கம்ஸ் கிளினிக்,மல்லாகம்),மகேந்திரசிங்கம்(கீல் பல்கலைக்கழகம் UK),கேந்திர ராணி(அவுஸ்ரேலியா),வரதராஜசிங்கம் (கணக்காளர் UK)ஆகியோரின் அன்புச் சகோதரனும் இராஜேஸ்வரி,சாந்தினி(கீல் பல்கலைக்கழகம் UK)சுமித்திரா(கணக்காளர் UK),கருணாகரன்(பொறியியலாளர்-அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும் ,ராஜசிங்கம்,பத்மலா,சர்மினி (UK),கவிதா(UK),கபிலன்(UK),ஆகியோரின் சிறிய தந்தையும் தேனுஜா(அவுஸ்திரேலியா) அருவின் ஆகியோரின் மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 13.08.2015 வியாழக்கிழமை ஒரு மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பூவோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;
குடும்பத்தினர்
அம்பலவாணர் வீதி,உடுவில் கிழக்கு
சுன்னாகம்