31ஆம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அமரர் தம்பு முத்துக்கிருஸ்ணன் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்)
உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பு முத்துக்கிருஸ்ணன் அவர்கள் 12-04-2013 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியம்(வறுத்தலைவிளான்) அவர்களின் அன்புக் கணவரும்,
பவானி, ரதி, ஈசா(மாட்டின்- பிரான்ஸ்), கேசா, அம்பிகா(செல்வி), சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வநாச்சி அவர்களின் பாசமிகு தம்பியும்,
இராசரத்தினம், சபாநாதன், சூரியகலா, கலா, சசிதரன், பெனடிக்ட் ராசேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வள்ளியம்மை, மதியாபரணம், காலஞ்சென்ற சிவகாமி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான குமார், தர்மலிங்கம், ஆச்சிப்பிள்ளை, பிறைசூடி ஆகியோரின் மைத்துனரும்,
ஆதவன்-கஜே, ரமணன்-மரீன், ஜீவன்-கார்த்திகா, சிந்து-டெனன், விநோத், லவணன், பிரவீன், ஜீவன், கபிலன், மயூரி, ரிஷி, தாரணி, செவ்வந்தி, சாமந்தி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,
நிலா, அமரன் ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.
எமது தந்தையாரின் பிரிவுத்துயரில் பங்கெடுத்து எமக்கு பலவழிகளிலும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், எமது துக்கத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் இறுதி நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கும், எமது அன்புத்தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த அனைத்துள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி.! ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி…!!!
தகவல்
குடும்பத்தினர்

