மரண அறிவித்தல்
திரு தம்பையா நாகரத்தினம் (முன்னாள் புகையிரதக் கட்டுப்பாட்டு அதிகாரி – அனுராதபுரம்)
கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும், இறுதியாக கனடா Richmond Hill இல் வசித்து வந்தவருமாகிய தம்பையா நாகரத்தினம் அவர்கள் 01-12-2012 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கேதாரஈஸ்வரி நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
சக்தி கருணாகரன், லகுபரன், பிறேமா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ், தேவகி, குபேந்திரராஜன், கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹம்சா மாதவன், ரோகன், றூபன், சஞ்ஜை, நிரஞ்ஜை, அனோஜா, மிரோஷன், நிருஷா, நிலான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-12-2012 திங்கட்கிழமை அன்று மாலை 6:00 மணிமுதல் 9:00 மணிவரை Elgin Mills Visitation, 1591 Elgin Mills Rd. East, Richmond Hill, ON. L4S 1M9 எனும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 04-12-2012 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் 3:30 மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று, பின்னர் மாலை 4:00 மணியளவில் தகனக்கிரிகைகள் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

