மரண அறிவித்தல்
திருமதி அற்புதம் சிதம்பரப்பிள்ளை
யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வதிவிடமாகவும் கொண்ட அற்புதம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 01-06-2015 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயம்(ஜெர்மனி), விஜயன்(பிரான்ஸ்), பாலேந்திரன்(லண்டன்), சிவராஜா(லண்டன்), யோகநாதன்(அவுஸ்திரேலியா), ஜெயசந்திரன்(கனடா), ஜெயகெளரி(பிரான்ஸ்), ஜெயகாந்தி(லண்டன்), சந்திரபாபு(இலங்கை), ஜெயதேவி(லண்டன்), ஜெயரஞ்சினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயலக்ஷ்மி, கமலசாந்தினி, சீதாதேவி, தர்மலக்ஷ்மி, கிருஷ்ணமூர்த்தி, மணிவண்ணன், குவேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசோதா, மயூரன், அஞ்சலீனா, கஜன், செந்தூரன், வினித், அகல்யா, அபிஷா, ருஷாலினி, சயுர்சன், அபிராமி, காயத்திரி, பிரதாயினி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
35 பி.ஏ தம்பி லேன்,
வண்ணார்பண்ணை,
யாழ்ப்பாணம்.

