மரண அறிவித்தல்
திருமதி நந்தினி பத்மராஜா
வடமராட்சி வதிரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நந்தினி பத்மராஜா அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தருமராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சீவரட்ணம் செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தக்சாயினி, புருசோத், லஷ்மன், கோவர்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகராஜா, சிவராஜா, சிங்கராஜா, பாக்கியராஜா, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களாகிய விக்னராஜா, பரமோஸ்வரி, நாகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவஞ்ஞானவதி, விமலாதேவி, சுகிர்தராணி, இந்திரா, காலஞ்சென்ற திருமதி சிவராஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும்,
நவரத்தினம் அவர்களின் பாசமிகு பெறாமகளும் அவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

