மரண அறிவித்தல்
திருமதி புவனேஸ்வரி தேவராசா
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி தேவராசா அவர்கள் 11-03-2015 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் துளசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தேவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிறீக்குமார்(கனடா), காலஞ்சென்ற சிறீதரன், சிறீகாந்தன்(பாபு- ஜெர்மனி), சிறீஆனந்தி(லண்டன்), சிறீரங்கன்(கனடா), சிறீஆனந்தன்(கனடா), சிறீகாந்தி(செல்வி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, மனோன்மணி, இராஜேஸ்வரி, கதிரம்மா, கதிராம்பாள், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேனகா, பராசக்தி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரன், விஜித்தா, செல்வமதி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரமேந்திரா கார்த்திகா, ஜிதேந்திரா கிஷாந்தினி, ரொபின்திரா ரம்யா, கஜேந்திரா, டிலுக்சன், யதூசன், தினுசன், பபிசன், அஞ்சனா, துர்க்காசினி, சிந்தியா, ஆரணி, விபுசன், சிறீசலுஜா, சரண்யா, சமீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லமிரன், அஸ்வித்தா, ரித்திக், ஆர்சூ, தமனாதிவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்

