4 ஆவது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி தனிஷா

இன்று நான்காவது பிறந்த நாள் காணும் செல்ல மருமகள் தனிஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

நிலாச்சோறு ஊட்டி
உன்னை
நிலவில்
வளர்த்தாளோ
நிலவின் பிடியில்
கணவன்
பிரபாகரன்
மடியில்
உன்னைக்
கொடுத்தாளோ
எனக்கொரு
அன்பின் சிகரமாய்
அக்கா
சிவப்பிரியா

அன்பில் பாலூட்டி
அவள் பண்பில் சீராட்டி
அகிலத்தில் நீ
அலைமகளின்
அருளாகிக்
கலையமுதம் பருகி
வீரத்திருமகளாய்
பலம் கொண்டு
ஆண்டுகள்
பலனூறு
வாழத் தந்தாளோ
உன்னைத்
தன்
செல்ல மகளாய்
தனிஷா

உன் செல்லக் கரம்
பிடித்துக்
கருணை முகம் கொடுத்துப்
பிரியமாய் என்னை
எப்போதும்
வரவேற்கும்
அண்ணன் கருணுக்கு
அன்புத் தங்கையாய்

அகவை நான்கை
இன்று தொடுகின்ற
சின்னத் தேவதை நீ
என் செல்ல மருமகளாய்
என்றென்றும்
சீரோடும் சிறப்போடும்
சித்திரமாய் வாழ
மகிழ்வோடு
வாழ்த்துகின்றோம்..

ரஞ்சன் மாமா..

என்னுடன் இணைத்து வாழ்த்துவோர்
அப்பா, அம்மா. தங்கச்சி குடும்பம்.
மற்றும் உறவினர், நண்பர்கள்-

birth