1 வது பிறந்தநாள் வாழ்த்து

செல்வி லகிஷா

கனடாவில் வசிக்கும் லகிஷா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 30.07.2014 அன்று புதன்கிழமை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்.

அவரை அன்புடன் ரஞ்சன் மாமா ( ஈழம்ரஞ்சன் ), அப்பா அம்மா – நீர்வேலி, அக்கா குடும்பம் – (லண்டன்), மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள்.

செல்வி லகிஷாவை தமிழ் சி.என்.என் குடும்பமும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

ஆண்டொன்று போனது அதிசயமாய் இருக்கிறது
தத்தித் தவழ்ந்த உன்னை அள்ளி அணைத்த போது
உன்பட்டு மேனி பஞ்சாய் ஒட்டிக் கொள்கிறது

உன் பொன் மொழிகள் கேட்டு வர்ணப் பூவாய் மலர்கிறது
உன் வர்ண ஜாலங்கள் வான வில்லாய் வளைகிறது

எடுத்தடி வைத்து என்னை எட்டிப் பிடித்து சின்ன இதழ்களில் உதிரும்
உன் சிரிப்பில் உலகத்தையே நான் மறப்பேன்

சின்ன மயிலே லகிஷா என் தங்கை வீட்டுக் குயிலே
இப்பூவுலகம் உனை வாழ்த்த கொண்டாடும் இந்த பொன்னாளாம்
உன் முதல் பிறந்த நாளில் அன்பு மாமா நான்
ஆசை முத்தம் தந்துன்னை அன்போடு வாழ்த்துக்கின்றேன்….

மழலைச் செல்வமே நீ செல்வச் செழிப்போடு
செல்வச் சந்நதியான் அருளோடு நீடூழி வாழ
அன்போடு வாழ்த்துக்கின்றேன்.

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் லகிஷா

தகவல்
ரஞ்சன் (மாமா)


unnamed