பல மாவட்டங்களில் இன்று 100 மி.மீற்றருக்கு மேல் பலத்த மழை

 

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மி.மீ.அளவில் கனமழை பெய்யும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வட மாகாணத்திலும் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப் போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங் களிலும் அபாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்வதுடன் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித் துள்ளது.

 

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.