ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த 27ஆம் திகதி நிறைவடைந்தது. அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.













கருத்துக்களேதுமில்லை