உயிருடன் உள்ளதை நிரூபிக்காவிடின் ஓய்வூதியம் இரத்து

அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோரின் வாழ்க்கைச் சான்றிதழை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து கிராம அதிகாரிகளுக்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

உயிருடன் உள்ளதை நிரூபிக்காவிடின் ஓய்வூதியம் இரத்து | Cancellation Of Pension On Proof Of Survival

 

ஓய்வூதியம் பெறுவோர் தாம் கையொப்பமிட்ட படிவத்தை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளரிடம் கையளிப்பதுடன், அந்தத் தகவலின் அடிப்படையில் ஓய்வூதிய உத்தியோகத்தர்கள் தரவு அமைப்பை புதுப்பிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாழ்நாள் சான்றிதழை உறுதி செய்ய கையொப்பமிடாத ஓய்வூதியர்களின் பதிவேட்டை பெப்ரவரி 20ஆம் திகதி சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கிராம உத்தியோகத்தர்கள் உரிய ஆவணத்தை பூர்த்தி செய்து பிரதேச செயலாளரிடம் மார்ச் 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கைரேகை மூலம் ஆயுள் சான்றிதழை சரிபார்க்கக்கூடிய 476 பொது மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் மற்றும் 26 பிராந்திய அலுவலகங்களின் பட்டியலை ஓய்வூதியத் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.