எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக பொங்கல் திருநாள் அமையும்.-அங்கஜன் எம்.பி.

சாவகச்சேரி நிருபர்
நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக இத் தைப் பொங்கல் திருநாள் அமையும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்;
இந்து சமயத்தின் பண்பாடு,நாகரீகம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது தைப்பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்.
உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாக போற்றப்படும் சூரிய பகவானுக்கு தமது நன்றியறிதலைக் கூறும் முகமாக தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் தைப் பொங்கல் நாளில் தமது அறுவடை சிறக்க உதவிய பூமித் தாய்க்கும்-சூரிய பகவானுக்கும் நன்றி தெரிவிப்பதனை தமது சமயக் தொண்டாகக் கொண்டுள்ளனர்.
கடந்த வருடம் எமது விவசாயிகள் இரசாயனங்கள் மீதான இறக்குமதித் தடையால் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருந்தனர்.
அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் எம் மூதாதையர்கள் எமக்கு காட்டிய இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து நாட்டு மக்களின் பட்டினியைத் தவிர்த்தவர்கள் எமது விவசாயப் பெருமக்கள்.
கடினமாக உழைத்து கௌரவமாக வாழும் விவசாயப் பெருங்குடியினரின் வாழ்வில் வளம் சேர்க்க இத் தைத் திருநாள் பண்டிகை உறுதுணையாக அமையும்.தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஈடேற வேண்டும் என மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.