நாட்டையும் ஆள முடியும் என்ற விழிப்புணர்வு எமது பெண்களிடம் மீண்டும் மலர வேண்டும். = தமிழ் அரசு வேட்பாளர் கலைவாணி தெரிவிப்பு.

வீட்டை மாத்திரம் அல்ல நாட்டையும் எமது பெண்கள் ஆள முடியும் என்று எமது பெண்கள் மீண்டும் புத்தெழுச்சி பெறுதல் வேண்டும் என்று எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கு 02 ஆம் வட்டாரத்தில் தமிழ் அரசு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்  கந்தையா கலைவாணி தெரிவித்தார்.

இவர் இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை(2) ஊடகங்களுக்கு தெரிவித்தவை வருமாறு;..

பாரதி கண்ட புதுமை பெண் ஈழத்தில் எப்போதோ தோற்றம் பெற்று விட்டாள்.தலைவரின் வழிகாட்டலில் அனைத்து துறைகளிலும் எமது பெண்கள் சாதித்து காட்டிய காலம் இருக்கின்றது.அந்த பொற்காலம் மீண்டும் மலர்தல் வேண்டும். வீட்டை மாத்திரம் அல்ல நாட்டையும் எமது பெண்கள் ஆள முடியும் என்று எமது பெண்கள் மீண்டும் புத்தெழுச்சி பெறுதல் வேண்டும்.

இலங்கையில் 52 சதவீத வாக்காளர்கள் பெண்களாக இருக்கின்றார்கள்.ஆனால் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுகின்ற பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.இதை மாற்றவே நான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன். என்னை உங்கள் வீட்டில் ஒருத்தியாக அம்மாவாக, சகோதரியாக, மகளாக கண்டு வாக்களியுங்கள்.

இந்தநாட்டிலே நிலவிய யுத்தத்தினால் அதிகமான பெண்கள் கணவன்மாரையும்,சகோதரர்களையும், பிள்ளைகளையும் இழந்து தாங்களே குடும்பத்தை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.பல பொருளாதாரக் கஸ்டத்தின் மத்தியில் கண்ணீருடன் தங்களின் குடும்பத்தை வழிநடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.இப்பெண்களின் துயர் துடைக்கப்படவேண்டும்.இன்று வடகிழக்கிலே வீணர்களின் ஆட்சியால் தமிழ்மக்களுக்கு நீதி,நியாயம்,அபிவிருத்தி,வாழ்வாதாரம்,சுயாட்சி மறுக்கப்பட்டுள்ளது.எமது உள்ளுராட்சி மன்றங்களுக்கு பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு வீட்டுக்கு வாக்களியுங்கள் எனக்குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.