காதலியை பார்க்க அரச பேருந்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய நடத்துனர்

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பேருந்து ரம்புக்கன – ஹதரலியத்த வீதியில் இயங்கும் பேருந்து என்பதுடன், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதற்காக ஹதரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் வீடு அருகாமையில் அமைந்துள்ளதால் தினமும் பேருந்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாலும் நடத்துனர் பேருந்திலேயே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த நடத்துனர் ரம்புக்கனை டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்தை, தனது காதலியைப் பார்ப்பதற்காக 9 கிலோமீற்றர் தூரம்  ஓட்டிச் சென்று, மீண்டும் திரும்பிய போது விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், விபத்தின் பின்னர் பேருந்தை மீண்டும் ஹதரலியத்த பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு குறித்த நடத்துநர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.