மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டை வழங்க வேண்டும்- இராதாகிருஷ்ணன்
மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.
கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ .இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
மலையக மக்களில் ஒரு தொகுதியினர் போசாக்கு குறைவாக காணப்படுகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முட்டையை மலையக மக்களுக்கு நிவாரண விலையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.












கருத்துக்களேதுமில்லை