யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
யாழ். புலோப்பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை கிழக்குப் பகுதியில் இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த அகழ்வில் ஈடுபட பயன்படுத்தப்பட்ட இரு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.












கருத்துக்களேதுமில்லை