அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்ற (13) முன்னெடுக்கப்பட்டது.
வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள திருவுருவச் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.













கருத்துக்களேதுமில்லை