நாவாந்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (16) இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இன்றும் (17) இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த பகுதியில் பொதுப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதோடு போத்தல்கள் உடைக்கப்பட்டு பொதுமக்கள் வீதியில் பயணிக்க முடியாதவாறு பதற்றநிலை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.