புதிய கூட்டுறவு ஆணைக்குழு உறுப்பினர்   கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டார்

சிரேஷ்ட ஊடகவியலாளரும், எழுத்தாளருமான யூ.எல். நூருல் ஹூதா, கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணைக்குழு பணிப்பாளர் சபை உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து இந்நியமனம் வியாழக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பல்வேறு சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்களில் ஒருவரான நூருல் ஹூதா, ஆய்வு, விமர்சன, விவரண தொடர் கட்டுரைகளையும் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.