தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட முல்லை கடற்கரை பிரதேசம்! மீனவர்களின் தொழில் பாதிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் கரையில் தொழில் செய்யமுடியாதவாறு அங்கு பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் ஒருவர் கடற்கரை பகுதி தனக்கு சொந்தமான பகுதியும் கடலுக்குள்ளும் தனக்கு என உரிமை கோரிவருவதால் மீனவர்களின் தொழில் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சிலாவத்தை தெற்கு பகுதியில் உள்ள தியோநகர் என்ற கடற்கரையில் 2.5 கிலோமீற்றர் தூரத்தைத் தனியார் நிறுவனம் ஒன்று கையப்படுத்தியுள்ளதால் சிலாவத்தை தெற்கு தியோநகர் மீன்பிடி சங்கத்தின் மீன்பிடி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.
1990 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட சங்கமாக சிலாவத்தை தெற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 ஆவது இறங்குதுறையாக சிலாவத்தை தெற்கு தியோநகர் இறங்குதுறை காணப்படுகின்றது.
இந்த நிலையில் தியோநகர் கடற்கரையையும் தனியார் சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள் இலங்கையில் கடற்தொழிலை நம்பி வாழும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த மக்கள் கடற்கரையில் தங்கள் தொழில்களைச் செய்துவருகின்றார்கள்.
ஆனால், முல்லைத்தீவு தியோநகர் கடற்கரையில் மீனவர்கள் ஒரு சிறு கொட்டில் கூட போடமுடியாத நிலை இதற்குக் காரணம். குறித்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் ஆளுகை செய்து வரும் கனாடா நாட்டினைச் சேர்ந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனம் அங்கு இருக்கின்றார்கள். அவர்கள் தற்போது கடலுக்குள்ளும் தங்களுக்குச் சொந்தமான நிலம் காணப்படுவதாகத் தெரிவித்து கடற்கரையில் மீனவர்கள் தொழிலுக்காகச் செய்யும் எந்த நடவடிக்கையையும் செய்யவிடாமல் தடைசெய்துவருகின்றார்கள்.
இது குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றது. இந்தப் பிரச்சினை பொலீஸ் நிலையம் வரை சென்று பின்னர் மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வரை சென்று இதுவரை தீர்க்கப்படாத நிலையில் கடற்தொழிலாளர்கள் இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்கள்.
இலங்கை நாட்டில் உள்ள கடற்கரையில் இலங்கை பிரஜை தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
கடற்கரை கடலோர பாதுகாப்பு பிரிவிற்குச் சொந்தமானது கடற்கரையை யாரும் சொந்தம் கொள்ளமுடியாது என சொல்கின்றார்கள். ஆனால் முல்லைத்தீவில் உள்ள அதிகாரிகள் சொல்கின்றார்கள். அவர்களுக்கு கடல்வரைக்கும் காணி இருக்கென்று சொல்லுகின்றார்கள்.
இந்த நிலையில் சனிக்கிழமை முல்லைத்தீவு கடலில் இறால் பிடி சீசன் காணப்படுவதால் வலையில் பட்ட இறால்களை வெய்யிலுக்கு மத்தியில் இருந்து தெரிந்து எடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் வெய்யிலுக்காக ஒரு தறப்பாளைக்கூட கட்டமுடியாது அங்கு தடியினை நாட்டி தறப்பாளினை கட்டியபோது அதனையும் அகற்ற சொல்லி நிக்கின்றார்கள் குறித்த நிறுவனத்தினர்.
150 வரையான மீனவர்களைக் கொண்ட தியோநகர் மீன்பிடி சங்கத்தினர் தற்போது 20 வரையான படகுகளை வைத்து கடற்தொழில் செய்துவருகின்றார்கள் .இவர்களை நம்பி பல குடும்பங்கள் மீன் தெரிந்து தங்கள் வாழ்வாதரத்தினை கொண்டுசெல்கின்றார்கள் 2.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரையில் வீச்சுவலை செய்யமுடியாது, தூண்டில் போட்டு மீன்பிடிக்கமுடியாது, ஏரல் கிண்டமுடியாது. ஒரு கொட்டில் போடமுடியாது இவ்வாறு மீனவர்களுக்கும் இந்த நிறுவுனத்திற்கும் இடையில் இந்த நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
இந்த விடயத்தில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் அதன் அமைச்சு மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள அதிகாரிகள் உடடியாகத் தலையிட்டு மீனவர்களின் தொழில் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டும் என மீண்டும் கடற்தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.













கருத்துக்களேதுமில்லை