விமான நிலையத்தில் அடாவடித்தனமாக நடந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அடாவடித்தனமாக நடந்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் மனைவி உள்ளிட்ட சிலர் வெளிநாட்டு விஜயம் மேற்கொள்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் பிரசன்ன ரணவீர தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியுடன் வருகை தந்ததால் விமான நிலையத்திற்குள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விமான நிலைய அதிகாரிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் பயணிகளின் பொருட்களை சுமந்து செல்லும் தாங்கியை தாக்கியதுடன் பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











