துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒருவர் கைது
துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய 28 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (22) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிமெட்டிய சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி தகராறு காரணமாக குறித்த நபர் தனது அண்டை வீட்டாரை துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கிரிமெட்டிய, சீப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த நபர், ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.











