அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம்….
(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)
நாடெங்கிலும் இயங்கி வரும் இரத்த வங்கி வலையமைப்பில் காணப்படும்
குருதிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெள்ளிக் கிழமை
(08.05.2020) மன்னார் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் இரத்ததானம் முகாம்
இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாந்தை மேற்கு
பிரதேச செயலகம் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இவ் இரத்ததான முகாம் காலை 9 மணி
தொடக்கம் மாலை 3 மணி வரை இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் மற்றும்
மன்னார் துயர் துடைப்புச் சங்க தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளார்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் இரத்ததான முகாமில் சுமார் 70 நபர்களுக்கு மேற்பட்டோர் குருதி
வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
















கருத்துக்களேதுமில்லை