இலங்கையில் கொரோனா தொற்று 915!
* நேற்று 26 பேர் அடையாளம்
* 382 பேர் குணமடைவு
* 524 பேர் சிகிச்சையில்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதிய தொற்றாளர்களாக 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று காலை அறிவித்துள்ளது.
அதேவேளை, தொற்றுக்குள்ளான 16 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 382 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 915 பேரில் 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 524 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.









கருத்துக்களேதுமில்லை