வைத்தியராக நடித்து ஏமாற்றிய இந்தியப் பிரஜைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை

வைத்தியராக நடித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிட்டம்புவ- வத்துபிட்டிவெல தள வைத்தியசாலையின் பெண் விடுதியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும்  ஒரு பையுடன் கடந்த சனிக்கிழமை குறித்த சந்தேகநபர் நுழைந்துள்ளார்.

மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியை தான் சந்திப்பதாக அவர் கூறியுள்ளார். எனினும் வருகை நேரம் முடிவடைந்தமையினால் வைத்தியசாலை ஊழியர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக  நிட்டம்புவ பொலிஸாருக்கு  உடனடியாக வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார்  அவரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபர், தான் ஒரு வைத்தியர் என்பதை நிரூபிக்கத்  தவறியமையினால், அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது, ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.