கல்முனையில் 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி(video)

பாறுக் ஷிஹான்

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 154வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் கடற்கரை பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு இன்று (03)இடம்பெற்றது

அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவின் கட்டளையின் பிரகாரம் கல்முனை பிராந்தியத்துக்கானபொலிஸ் அத்தியட்ச்சகர் புத்திக ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த  அவர்களின் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் அவர்களின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும்
கல்முனை மாநகரசபையும், சாய்ந்தமருது ஏ வலய திண்ம கழிவு பிரிவும் இணைந்துசாய்ந்தமருது கடற்கரை சுற்றுப்புற பகுதிகளில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது .

இதன்போது கடலோர சுற்றுச்சூழலில் உள்ள குப்பை கூழங்கள் என்பன அகற்றப்பட்டு கடற்கரை சூழல் சுத்தப்படுத்தப்பட்டது .இதில்
கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ,பொதுமக்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்  குறிப்பாக சுற்றுச்சூழல்  பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தும் முகமாக குறித்த  சிரமதானப்பணி  மேற்கொள்ளப்பட்டமை  குறிப்பிடத்தக்கது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.