மட்டக்களப்பு தாழங்குடாவில் கார் விபத்து ; இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு பாதையை விட்டு தடம்புரண்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றார்கள்.
இதன்போது காரினை செலுத்திச்சென்றவரும் காரில் பயணம் செய்த இரண்டு சிறுவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.












கருத்துக்களேதுமில்லை