வவுனியா ஒலுமடு பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பப்பாசிமரங்கள் அழிவு!

வவுனியா ஒலுமடுப் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த பப்பாசிமரங்கள் முழுமையாக அழிவடைந்துள்ளன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில்  நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

குறிப்பாக வவுனியா நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக விவசாயி ஒருவரால் செய்கை பண்ணப்பட்டிருந்த 600 இற்கும் மேற்பட்ட பப்பாசி செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இலட்சம் ரூபாய் அளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக  விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.