யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது

யாழில் ட்ரோன் கெமரா கண்காணிப்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழில் இன்றைய தினம் விமானப்படை மற்றும் யாழ்ப்பாண பொலிசார் இணைந்து ரோன் கமரா பயன்படுத்தி யாழ் நகரப் பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்ததில் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார்.

இன்று (26) காலை யாழ் நகரம் நல்லூர், அரியாலை, குருநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ட்ரோன் கெமரா கண்காணிப்பின் போதே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாது வீதியில் நின்றமை, பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணித்த போன்ற குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.