கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையம் நிர்மாணிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையம் நிர்மாணி

தெற்காசிய கேந்திர வலய துறைமுகமான கொழும்புத் துறைமுகத்தை,

சேவை வழங்கும் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்தல் என்பது, எமது தேசிய துறைமுகங்கள் திட்டத்தின் மூலோபாய நோக்கமாகும்.

அதன் கீழ், கொழும்பு தெற்குத் துறைமுகத்திற்குச் சொந்தமான பெட்டன்பர்க் மற்றும் புளுமென்டல் போன்றவை,

பிராந்திய சேவை வழங்கல் பிரதேசமாக அரச – தனியார் பங்குடமையின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவ்வாறே, இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளக கொள்கலன் நடவடிக்கைகள் நிலையத்தினை, கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கும் வசதிகளுடன் நிர்மாணிப்பதற்கும், ஐக்கிய கொள்கலன் முனையம் (UTC) பொருத்தமானதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் (WCT) போன்றவற்றின் நடவடிக்கைகளை, பகுதியளவில், 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன்,

அதற்கமைய கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கை இயலளவு வருடத்திற்கு இருபதின் சம அலகுகள் பத்து மில்லியன்களை அதிகரிக்கும்.

இந்த நிலைமையில் துரிதமாக சேவை வழங்கும் நிலையமொன்று நிர்மாணிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளதுடன்,

அதற்காக கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) நிறுவன முதலீட்டு முன்மொழிவொன்றை சமர்ப்பித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு துறைமுக நகரத்தின் எல்லையாக அமையும் தெற்காசிய நுழைவாயில் கொள்கலன் முனையம் (SAGT),

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT),

மற்றும் கிழக்கு கொள்கலன் முனையம் (ECT) ஆகிய முனையங்களுக்கு அருகிலுள்ள –

கிட்டத்தட்ட 5.3 ஹெக்ரயார் காணியில் கொழும்பு தெற்குத் துறைமுகத்தின் பெட்டன்பர்க் பிரதேசத்தில்,

அரச – தனியார் பங்குடமையின் கீழ் கப்பல் பொருட்கள் சேவைகள் வழங்கல் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக,

குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையை மதிப்பீடு செய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கும்,

குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கமைய எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.