கனிஷ்ட பாடசாலைகள் மீண்டும்…

பாடமும் மறந்து பல நாள் போகாததால்
சாலையும் மறந்து போன பாட சாலை
தொடங்குகிறது மீண்டும்
சேரின் அறிக்கையும்
சேர்மாரின் அறிவுக் கையும்மாறி மாறி முரண்பட,
மாணவர் விழி பிதுங்க,
Some பலத்தில் சிலர் சம்பளத்தில் இருக்கும்பிரச்சினையை முடிக்க
பின்னால் முயற்சிக்க,கொரொனா முடிந்ததா
கொஞ்சம் பதுங்குகிறதாவென
பெரிய சந்தேகம் பெற்றோர்க்குள் இருக்க,
பாடமும் சாலையும் மறந்த பாட சாலை
மீண்டும் தொடங்குகிறது
என்னம்மா இது இந்தச் சட்டை
சின்னதாகிப் போனதே என சின்னது சிணுங்க,
திண்டு கொழுத்து உண்ட உடம்பு
ஊதிப் போயிற்றெண்டு உடன் பிறந்தது சீண்ட,
எண்ட கொப்பியில இரண்டக் காணல்ல எண்டு
இளையவன் அழ, கரண்டுக் கம்பியில
கழன்று தொங்கும் பட்டம் உண்ட கொப்பிதான் என்று
உம்மா கேலி செய்ய,
பாடமும் சாலையும் மறந்த பாட சாலை
மீண்டும் தொடங்குகிறது
ஆட்டோ ஸ்கூல் ஹயர் ஆட்டோமெடிக்காய் கூட,நோட்டுப் புத்தக விலை
நொந்து போகக் கூட,
போட்டுக் கொடுக்கும் டிபன் போட்டி போட்டு விலையேற,
கேட்டு வாங்கும் கெண்டீன் கேற்று மூடி இருக்க,
காட்டு மரங்கள் வகுப்புக் கட்டிடம் அருகில் முளைக்க
பாடமும் சாலையும் மறந்த ,பாட சாலை
மீண்டும் தொடங்குகிறது
நேர்சரி செல்லாப் பிள்ளை நேரே செல்லப் பிள்ளையாய்
ஆசியர் கண்டு நடுங்கி ஆரம்ப வகுப்பில் சேர,
புலமைப் பரீட்சைப் பிள்ளை பழமையாகிப் போக,
எழும்பாது படுத்துப் பழகிய இளையது இடும்பு செய்ய,
வழமைக் கல்வி திரும்ப வல்லவன் துணையை நாடி,
பாடமும் சாலையும் மறந்த  பாட சாலை
மீண்டும் தொடங்குகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.