இந்த அரசாங்கத்தில் புத்திஜீவிகளுக்கும் அறிஞர்களுக்கும் இடமில்லை – சஜித்
தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களுக்கு இலவசமாக உரம் வழங்குவதாக ஏலவே வாக்குறுதி அளித்திருந்தாலும் இன்றளவில் விவசாய நிலங்களை உரத்தை வைத்தே அழித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கீழ் தரமான ஒப்பந்தங்களை மேற்கொண்டு தரமற்ற உரத்தை இறக்குமதி செய்து விவசாய சமூகத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், பாழ்நிலத்தை சுவர்க்பூமியாக மாற்றுவதாக என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் நாட்டுக்கு சுபீட்சத்திற்கு பதிலாக பேராபத்தயே ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவசாயிகள் அநாதரவாக இருப்பதாகவும், அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம் கூட இருண்டு விட்டதாகவும்,மக்கள் மூன்று வேளையில் ஒரு வேளை உணவு கூட சாப்பிட முடியாத சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வில்கமுவ கமநல சேவை நிலையத்திற்கு முன்பாக இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.இந்தப் போராட்டத்தை மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஏற்பாடு செய்திருந்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் வில்கமுவ கமநல சேவைகள் திணைக்களத்தை பார்வையிடவும் கலந்து கொண்டார்.
யாருக்கும் சுமையாக வாழாத விவசாயிகளை சட்டியிலிருந்து அடுப்பிற்குள் தள்ளி, அரசாங்கம் நடத்தும் இந்த கொடூரமான செயல் மனிதாபிமானமற்றது என்பதோடு, மக்களின் தோளில் சுமந்து கொண்டு ஆட்சிக்கு வந்து அனுபவிக்கும் அரசாங்கத்திற்கு மக்களின் துன்பம் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்குள் இன்றளவில் புத்திஜீவிகளுக்கும் அறிஞர்களுக்கும் இடமில்லை என்பதோடு,முழந்தாளிட்டு தலையாட்டும் பொம்மைகளுக்கே குறித்த இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,புத்தி மரம்பே போன்ற அறிவார்ந்த அறிஞர்களை வெளியேற்றும் நிலைக்கு அரசாங்கம் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பெரிய ஒரு விவசாய அரனை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.












கருத்துக்களேதுமில்லை