தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் அவர்களால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பட்சணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,நிகழ்வின் விசேட அம்சமாக ,
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்கு, துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு அமைவாக
வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்களால் நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கைத் திருநாட்டின் சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக இச் சிறப்பு மிகு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கருத்துக்களேதுமில்லை