வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தபாலில் வந்த போதைப்பொருள் மீட்பு!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்துக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட  34.75 மில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க ‘குஷ்’  போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்  (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா நேற்று (புதன்கிழமை)  தெரிவித்தார்.

பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, மினுவாங்கொட, வெலிசர, நுவரெலியா மற்றும் தலங்கம ஆகிய இடங்களில்  உள்ள வீடுகளுக்கு  முகவரியிடப்பட்டு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 10 பொதிகள் விமான  தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால், இந்த பொதிகளை பெற்றுக் கொள்வதற்கு கொழும்பு மத்திய தபால் நிலையத்துக்கு எவரும் வராமை காரணமாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அங்கு பணிபுரியும் சுங்க அதிகாரிகள் பொதிகளை திறந்து பரிசோதித்தனர்.

இதன்போதே குறித்த பார்சல்களில்  போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.