அட்டாளைச்சேனை அக்ஃ அல்- மினா வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும்

(கே.ஏ.ஹமீட்)

அட்டாளைச்சேனை சம்பு நகர் அக்ஃ அல்- மினா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் பிரியாவிடை நிகழ்வும் மாணவர் மன்றமும் நேற்று (வியாழக்கிழமை) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் மாஸ்டர் கவுன்சிலர் எம்.ஏ.தாஹிர்,
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஏ.பீ.கமால்தீன் பிரதம அதிதிகளாகவும், பாடசாலையின் மேம்பாட்டு உத்தியோகத்தரும், சேவைக் கால ஆசிரிய ஆலோசகர் மௌலவி என்.ரீ.நஸீர் கௌரவ அதிதியாகவும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஏ.எல்.எம்.அர்சாத், பாடசாலையின் கட்டாயக் கல்வி குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.அசாட் அபூபக்கர், ஏ.எச்.நியாஸ் அதிதிகளாகவும் கலந்து கொண்டு 2023 (2024) கல்வி ஆண்டில் திறமை காட்டி மாணவர்கள் இதன் போது சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்கள் வழங்கி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உதவி அதிபர் எம்.ஐ.ஹாசீம், வலயத் தலைவர் எம்.எச்.அப்துல் ஹை, ஆசிரியர்களான ஏ.பீ.தாஹிர், என்.ரீ.அஹ்சான்,ஏ.சீ.எம்.பாயிஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜீ.ஹம்சார் உட்பட பிரமுகர்கள் எஸ்.டி.ஈ.சீ. உறுப்பினர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பாடசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அறூஸின்
சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இதில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன