தேடலில் வந்த தோழன் கவிதை நூல் வெளியீடு!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

திஹாரியை சேர்ந்த முஷ்பிகா முன்ஷிரின்  தேடலில் வந்த தோழன் நூல் வெளியீடு  திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் மூதூர் ஜே.எம்.ஐ. நிறுவன பணிப்பாளர் ஜே.எம்.இஹ்ஷான் தலைமையில் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை அழைப்பாளராக சிரேஷ்ட எழுத்தாளர் நஜ்முல் ஹூசைனும், ஹாதியா இஸ்லாமிய கற்கை நிறுவன அதிபர் அஷ்செய்க் அக்ரம் அப்துஸ் ஸமத்தும் கலந்து சிறப்பித்தனர்.

ஹாதியா இஸ்லாமிய கல்லூரி இறுதியாண்டு மாணவியாக கல்வியை தொடரும் நூலாசிரியர் முஷ்பிகா முன்ஷிரின் கன்னி கவிதைத் தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது தேடலில் வந்த தோழன்