மட்டக்களப்;பு தன்னாமுனையில் விபத்து காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் பலி! மேலும் 3 பேர் வைத்தியசாலையில்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில்   இடம்பெற்ற வாகன  விபத்தில் ஓட்டோவில் பயணித்தவர்கள் காயம் அடைந்துள்ளனர் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடியை சேர்ந்த ஓட்டோவே இந்த விபத்தில் சிக்கி உள்ளது.

மேற்படி விபத்தில் ஓட்டோவில் பயணித்த காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் – குழந்தை, பெண் உட்பட மேலும் 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்