மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

(அஸ்ஹர்  இப்றாஹிம்)

இந்த வருடத்திற்கான  முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனின் நெறிப்படுத்தலின் கீழ் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர்  மஸ்தானின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குலசிங்கம் திலீபன், ரிஷாத் பதியுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன்   ஆகியோரின் பங்கேற்போடு  மன்னார்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் சட்டவிரோத கடல் அட்டை, ‘ஐ’ செயத்திட்டத்தின் மூலம் பூரணப்படுத்தப்படாமல் உள்ள வீதிகள், காணிப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாகவும், வீதி அபிவிருத்தி சம்பந்தமாகவும், போக்குவரத்து, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை, கல்வி , சுகாதாரம்,மீன்பிடி, நீர்ப்பாசனம்,போக்குவரத்து,  இது போன்ற இதர விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டன .

மேற்படி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்,  முப்படை பிரதானிகள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது