வடக்கு மாகாணத்திற்கு சுற்றுலாவந்த வெளிநாட்டு பயணியிடமிருந்து பொருள்களை திருடியவர் கைது!

(அஸ்ஹர் இப்றாஹிம்)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு உல்லாசப் பிரயாணியொருவர் குளியலறைக்கு சென்ற சமயம் பார்த்து அவரின் பொருள்களைத் திருடிச் சென்றுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் துரிதமாக பொலிஸார் செயற்பட்டதன் காரணமாக சந்தேக நபர் ஒரு மணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருள்களும் கைப்பற்றப்பட்டும் உள்ளன.

திருடப்பட்ட பொருள்களுள் வெளிநாட்டு, உள்நாட்டு பணம், மடிக்கணிணி, கமரா உட்பட மேலும் பல பொருள்கள் அடங்கியுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (