சிவனொளிபாத மலை யாத்திரைக்கு பயணித்த வானும் பஸ்ஸூம் நேருக்குநேர் மோதி விபத்து! 10 பேர் காயம்
சிவனொளிபாத மலை யாத்திரைக்குப் பயணித்த வானும் பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
கம்பஹாவிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வானும் மாத்தறையிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ்ஸூம் இவ்விபத்தில் சிக்கியுள்ளன.
குறித்த விபத்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலிருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வான் முன்னால் சென்ற லொறியை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வானும் பஸ்ஸூம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்0